புலிகளை ஒழிப்பது கஷ்டம்-ராணுவ தீர்வு சாத்தியமல்ல: அமெரிக்கா

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது.

ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல.

ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதலைப் புலிகளாவது தலைமறைவாகக் கூடும். அவர்களது கொரில்லாத் தாக்குதலை தவிர்க்க முடியாது என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் பரிந்துரைகளை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் இலங்கை அரசு செய்த பெரிய தவறு, சிங்கள கட்சிகளையும் இதில் இணைத்து ஒப்பந்தம் செய்யாததுதான்.

அரசியல் ரீதியிலான தீர்வுக்கு இலங்கை அரசு முயன்றால் விடுதலைப் புலிகளை மேலும் வலுவிழக்கச் செய்யமுடியும் என அமெரிக்கா நம்புகிறது. அரசியல் ரீதியிலான தீர்வால் மூன்று வகையான பலன்கள் கிடைக்கும்.

ஒன்று, வன்னி பகுதியில், அகதிகளாக உள்ள 2 லட்சம் தமிழர்களும் தெற்கிலும் சுதந்திரமாக வசிக்க வகை ஏற்படும். தங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.

2வது, இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று விடுதலைப் புலிகளால் கூற முடியாது.

3வது, விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யாதீர்கள் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைக் கோர முடியும்.

அரசியல் ரீதியிலான தீர்வின் மூலம் மனித உரிமை சிக்கலையும் தவிர்க்க முடியும். இதுதான் இலங்கைத் தமிழர்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இலங்கை விவகாரத்தைத் தீர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த முறையில் பங்காற்ற முடியும். தங்களது அனுபவங்களை இதில் பயன்படுத்த முடியும்.

இந்தியா தலையிட வேண்டும்:

இந்தியத் தலையீட்டின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு தீர்வைக் காண முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சாத்தியமல்ல என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. சமீபத்தில், இலங்கைக்கான ராணுவ உதவிகளை அமெரிக்க அரசு முற்றிலும் நிறுத்தி வைத்தது என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.

அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் மற்றும் சிறார் வீரர்கள் குறித்து வெளியான தகவல்களைத்தொடர்ந்து இந்தநடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது. இருப்பினும் தீவிரவாதத்தை எதிர்த்து இலங்கை ராணுவம் போராட முன்பு அமெரிக்கா உதவி செய்தது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக இலங்கைக்கு கடல் கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பு மற்றும் 10 படகுகளை இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு வரும் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களால் முன்பு போல ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. இது சமீபத்திய அவர்களது தோல்வியின் மூலம் தெளிவாகியுள்ளது.

தற்போது அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் போகும் உதவிகள் அனைத்துமே மனிதாபிமான நோக்கில்தான் உள்ளன. அல்லது பொருளாதார, அரசியல் கட்டமைப்பை மேம்படுத்தும் உதவிகளாகவே உள்ளன.

இந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 32.7 மில்லியன் மதிப்பிலான உணவு மற்றும் பிற பொருட்ளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்றார் பிளாக்.

மீண்டும் இந்த 'தவறை' செய்வோம்!: சீமான்-அமீர்,இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.

ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ்.

கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது:

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்துப் பேசினோம். இந்தக் கொடுமைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்...

தெருவில் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்துவிட்டு ஒரு நாய் கூட, இந்த சண்டை வேண்டாம் என்ற அர்த்தத்துடன் குரல் கொடுப்பதைப் பார்க்கலாம். அப்படி நாய்களுக்கு இருக்கும் உணர்வு கூடவா மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எழுப்பிய குரல் தவறென்றால், அந்தத் தவறைத் தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டே இருப்போம், என்றார் அமீர்.

உடனிருந்த சீமான் கூறியதாவது:

என் இன விடுதலைக்காக வீரத் தமிழ் மறவர்களாக சிறை செல்கிறோம்.

உலகில் எந்த நாட்டிலும் தன் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அவலம். நானும் என் தம்பி அமீரும் ஈழ மக்களுக்கு ஆதரவளித்துப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் உறவுகளுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம்.

உலகில் கோட்டை கட்டி ஆண்ட முதல் இனம், இன்று மண்டபம் அகதி முகாமில் கோணிப்பைக்குள் சுருண்டு கிடக்கிறது. ஈ, எறும்புக்கும் தானம் செய்வதற்காக அரிசி மாவில் கோலம் போட்ட எம் குல மக்கள் இன்று கால்படி அரிசிக்கு வழியின்றி கையேந்தி நிற்கிறார்கள். இந்த அவலத்தை கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா... தமிழர்களுக்குக் குரல் கொடுத்த பெருமையுடன் சிறைக்குச் செல்கிறோம்.

எங்கள் பேச்சு சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், தலைவர்கள் அல்ல என்றார் சீமான்.

இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.

இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை - பிரணாப் முகர்ஜி

இலங்கைக்கான இராணுவ உதவியை நிறுத்துமாறு தமிழகக்கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் அதனை மன்மோகன்சிங்கின் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.

ராஜ்சபாவில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை

இந்தியா மறந்து விடக் கூடாது. இது இலங்கையின் பாதுகாப்புடன் மட்டும் சம்பந்தமுடையது அல்ல. இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பைக் கொண்ட ஒரு விடயமாகும்.

அண்மையில் கொழும்பு சென்ற மூன்று இந்திய ராஜதந்திரிகளின் நோக்கத்தை விபரித்த முகர்ஜி இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளை தாம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேறு இடங்களை நாட வேண்டாம் எனக் அவர்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ன உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புத் தேவை என்ன என்பது குறித்து ஒரு பொதுவான மதிப்பீடு இருக்க வேண்டும். ஏனெனில் இப்பிரச்சினை இந்தியாவுக்கு நெருக்கமான ஒன்றாகும். இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை என்பது நிச்சயமான விடயமாகும். இலங்கையின நிலவரம் தொடர்பான மதிப்பீட்டில் இவ்விடயங்கள் யாவும் உள்வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாச்சிக்குடா , புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்

வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான முன்னரங்க நிலைகள் இடையே இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுத சூட்டாதரவுடன் இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வன்னிப் பகுதியில் கன மழை ஆரம்பித்துள்ள நிலையில், படையினரின் முன்னகர்வுகளுக்கு மழை பெரும் தடையாக உள்ளது. அடை மழை பெய்வதற்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிமித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களால் படையினரின் முன்னகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புகளை மூடிமறைப்பதற்காக இனிவரும் காலங்களில் போர் முனைச் செய்திகளை சிறீலங்காப் படையினர் வெளியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா நீக்கம்

ஐக்கிநாடுகள் சபையின் வர்த்தக பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கப்பட இருப்பதாக, கொழும்பின் ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

18 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில் சிறீலங்காவிற்குப் பதிலாக இந்தியாவை இணைப்பதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.


இலங்கையில் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மற்றும் அடக்கு முறைகளால் இவ்வாறான அனைத்துலக தொடர்புகளையும், அங்கத்துவத்தையும் சிறீலங்கா அரசு இழந்து வருகின்றது.


இவ்வருடம் மே மாதம் 21ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருந்து சிறீலங்கா அரசு நீக்கப்பட்டிருந்தது.


சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த உலக நாடுகள், அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தன.


இதேபோன்ற கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக் கொடுத்துவந்த GSP+ என்ற ஏற்றுமதி வரிச்சலுகையை வழங்க மறுத்து வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து

தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது!

நாளை காலை 9 மணியளவில், avm studio விற் முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது இது குறித்து, இயக்குனர் சீமான், கைதாகிய தருணத்தில் அங்கிருந்த எமது நிருபர் வழங்கிய சிறப்புச்செவ்வி!

thankyou:4tamilmedaia.com

வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன்

கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது

என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தளபதிகளில் சிலர் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் போது தோல்வியுற்று பின்வாங்கியவர்கள். இவர்களுக்கு இந்த அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியின் மேற்குப்பகுதிகளில் படைநடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் படையினர் தற்போது குழம்பிய நிலையிலுள்ளனர். படைத்தரப்பினர் நினைத்தது போல் ஒரு காலவரையறைக்குள் வன்னியை ஆக்கிரமிக்கும் நிகழச்சி நிரல் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களால் முடியதாது போயுள்ளது.

தங்களது இயலாமை காரணமாகவே மக்கள் வாழ்விடங்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை இடம்பெயரச்செய்து வருகின்றார்கள். இன்று மக்கள் இடம்பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்த வருகின்றார்கள்.

வியட்நாம் விடுதலையடையும் இறுதித் தருணத்திலும் அங்குள்ள மக்கள் இவ்வாறானதோர் துயரத்தை அனுபவித்தமையினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்பிக்கையும் விடுதலை மீதான பற்றுறுதியுமே எங்கள் விடுதலையை விரைவாக்கும் எனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடுக்கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு. ஞானம் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரேற்றப்;பட்டு, தேசியக்கொடியேற்றப்பட்டு வீரச்சாவடைந்த 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் மாலைகள் சூட்டப்பட்டு பொது மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியில் மேலும் பல பகுதிகளிலும் இக் கரும்புலிகளுக்கு நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://cache.daylife.com/imageserve/06L3fohc5K9vw/610x.jpg

கொட்டும் மழையில் மனித சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்தார்


ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தியும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கன மழையின் மத்தியில் நடைபெற்றது.


சென்னை மாட்ட ‌‌ட்சிர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ணிவகுப்பை தொடங்கி வைத்தார்.
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிறீலங்கா படையினரால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், ஈழத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் இன்றைய போராட்டம் நடைபெற்றது.


கடந்த 21ஆம் நாள் நடைபெறவிருந்த இந்த மனித சங்கிலிப் போராட்டம் கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் அடை மழையின் மத்தியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_3.jpg


இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்கிய மனித சங்கிலிப் போராட்டம் 5:00 மணிவரை நடைபெற்றது.


மனித சங்கிலி அணிவகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, திறந்த 'ஜீப்' ஊர்தி மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.
மாவட்ட ட்‌‌சியர் அலுவலகம் முதல் அண்ணா சிலைவரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், சட்டவாளர்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார்.


அண்ணாசிலை முதல் கிண்டிவரை, மாணவர்கள் மற்றும் பா...வினர் ணிவகுப்பில் ங்கேற்றுள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், .பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_1.jpg


தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை சனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு..ஸ்டாலின் ங்கேற்றுள்ளார்.
தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருடன் ஆலந்தூர் பாரதி ள்பட ல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம்,

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_2.jpg ..வேலு ஆகியோரும், செங்கல்பட்டு முதல் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, .பெரியசாமி ஆகியோரும் ங்கேற்று‌‌ள்ளனர்.
இந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பில் பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொண்டுள்ளனர்.


தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்றைய மனித சங்கிலியில் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள் தமது தொண்டர்களுடன் பெருமளவில் இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது


இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர்; கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். இவரது வீட்டிற்கு அருகாமையில் காவற்துறையினரும்; குழுமியிருந்தனர்.

சீமான் மற்றும் அமீர் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயககுனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோரும், ஏராளமான சினிமாத்துறை சார்ந்தோரும் குழுமியுள்ளதால் அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

ராமேஸ்வரம் கூட்டத்தில் இன உணர்வுமிக்க சீமான் ஈழத்தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும், விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்தும் அவரது பல விடயங்களை உரையிலே வெளிப்படுத்தியிருந்தார். அவ்வுரை குறித்தே அவரைக் கைது செய்யவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதிமுகவின் தலைவி ஜெயலலிதா மற்றும் தமிழகாங்கிரஸ் கட்சியினர் சீமான், அமீர் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா கைதாவாரா?

அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது

இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! - தமிழீழ விடுதலைப் புலிகள்

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில்

இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தர்மப் போர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் வாழும் எமது தொப்புள்கொடி உறவுகளான எமது மக்கள் ஓரணியாக அணிதிரண்டு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டி இந்திய அரசுக்கு முன்னால் பல போராட்டங்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பல பாகங்களிலும் வாழும் எமது உறவுகளும் தாயக மண்ணின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த வேளையில், எமது மண்ணில் அதற்கு எதிர்மாறான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாத அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் இனத்துரோகிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.10.08) மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த செய்தியினை நீங்கள் நன்கறிவீர்கள்.

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்க இந்த இனத்துரோகிகள் முயற்சி செய்கின்றனர்.

ஆகவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வரலாற்றுத் தவறினை இழைக்க வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் பெண் கைதிகள் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகிறது.

பெண் சிறை அதிகாரி ஒருவர் இவர்களைச் சில சமயங்களில் சித்திரவதையும் செய்கிறார். அத்தோடு இப்பெண் கைதிகள் பழிவாங்கவும் படுகின்றனர். இந்தத் தமிழ் பெண் அரசியல் கைதிகளுள் நாவல்வர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண் கைதிகள் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்துக்கு இவர்கள் குழந்தையுடன் செல்லும் போது குழந்தையைப் போர்த்துவதற்குத் துணியின்றி பொலித்தீனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக இப்பெண் தமிழ்அரசியற் கைதிகள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணிக்குப் பல தடவைகள் கடிதமூலம் முறையிட்ட போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவி;ல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது உறவினர்கள் மூலம் பெண்கள் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இது பற்றித் தெரிவித்ததாகவும் ஆனால் தாம் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இன்றி அரசியல் தீர்வு சாத்தியமா? - ஜெஹான் பெரேரா கேள்வி

விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் கட்சிகளான ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பது தெரியவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டரை வருட காலத்தின் பின்னர் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அரசாங்கப் படைகள் கிளிநொச்சியின் வாயில் நிற்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். 'பெரும்பான்மை' தீர்வு காலத்துக்குக் காலம் சர்வகட்சி மாநாடுகள் கூட்டப்பட்டபோதும் அவற்றின் மூலம் தீர்வொன்று முன்வைக்கப்படாததுடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய தீர்வு யோசைனை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெஹான் பெரேரா, அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிற்கு பெரிய தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துவரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சர்வகட்சி மாநாடு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சியெனக் கூறி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. எதிர்த்தரப்பினருடனும், தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றைக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தன்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து தீர்வொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதையே இது காட்டிநிற்பதாக ஜெஹான் பெரேரா குறிப்பிடுகிறார். பேரம்பேசும் சக்தி தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பெரும்பான்மையின மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொறிமுறையை தமிழர்கள் அடிப்படைப் பிரச்சினையாகப் பார்ப்பதாகவும், அப்படி இருக்கும்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடன் இணைந்து முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாமல் சிங்களத் தேசியவாதக் கட்சிகளை மட்டும் இணைந்துகொண்டு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வை குறைந்தபட்சமேனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்பது சந்தேகமேயெனவும் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தமிழ் போராட்ட வரலாறு முழுவதும் சிங்களப் பெரும்பான்மைக்கான ஆதிக்கத்தைக் கையாள்வதாகவே இருந்திருப்பதாகவும், இதனால்தான் விடுதலைப் புலிகள் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இருந்துவந்ததாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. �விடுதலைப் புலிகள் கொண்டிருக்கும் இராணுவப் பலமே அவர்களின் பிரதான பேரம் பேசும் சக்தியாகக் கருதப்படுகிறது. இது வேறெந்த தமிழ் கட்சிகளிடமும் கிடையாது. ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகள் தங்களுடைய இருப்புக்கே அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கும் நிலையில் அவர்களிடம் பேரம் பேசும் சக்தி சிறிதேனும் இருப்பதாகக் கொள்ளமுடியாது� என ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அரசபக்க நியாயம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லையென அரசாங்கம் நம்புவதற்கு சில நியாயமான காரணங்களும் உண்டு எனக் குறிப்பிடும் அவர், அது சிங்கள தேசியவாதப் பார்வை மட்டுமன்றி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகக் கையாழும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக இருந்துவரும் சர்வதேசத்தின் பார்வையும் இதுவாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பின்னணிப் பலத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கை முழுமையாக அமுலிலிருந்த காலப்பகுதியே பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு சிறந்த காலமாக விளங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தனியான அரசைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நோக்கோடு அந்த சமாதான முயற்சிகளை விடுதலைப் புலிகள் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்ட கட்சி தற்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதுடன், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக வடக்கு, கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 2003ஆம் ஆண்டு மார்ச்சில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாகவும், ஜுலை மாதம் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளில் கலந்துகொள்ளமாட்டோமெனவும் அறிவித்ததன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டனர் எனவும் ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி

அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல். தமிழாக்கம்.

இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் தாம் புலிகளை வெற்றிகொண்டதாக அறிவித்த பின்னர் பல முனைகளில் தாக்குதலுக்குளளாகி சின்னாபின்னமான பல வரலாறுகளை நினைவுகூர்ந்தார் ப.நடேசன் அவர்கள்.

சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்

தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்,

இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்களை கைதுசெய்ய முடியுமா என காவற்துறையினர் சட்டஆலோசனைகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

அதேநேரம் முழு தமிழ் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்று காரணமாக தன்னால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் வரவேற்பதாகவும் முதல்வர் கூறியது போல், போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க அருகதையற்றவர்கள் என சத்தியராஜ் கூறியுள்ளார் தான் இதனை கட்சி சார்பாகவோ அல்லது வேறு எவருக்கும் வால்பிடிப்பதற்காகவும் கூறவில்லை எனவும் தமிழன் என்ற உணர்வோடு தெரிவிப்பதாக சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இன பேதமின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இயக்குனர் அமீர், சீமானை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றனர். இவர்கள் பேசியது சரியா, தவறா என தான் கூறவில்லை எனவும் இந்த விடயத்தில் முழுத் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் தனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரச்சினை எற்பட்ட போது திரையுலகம் தன்பின்னால் நிற்கவில்லை.

திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் தனக்கு உதவி செய்ததாகவும் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் இவ்வாறு பேசி உள்ளனர். எனவே இவர்கள் பின்னால் திரையுலகம் நிற்க வேண்டும் எனவும் சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மனிதச் சங்கிலி போராட்டம்:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் (ஒக்21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னையில் பெய்த கடும்மழை காரணமாக 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி மனிதச் சங்கிலியை ஆரம்பித்து வைத்து, நிறைவடையும் வரை அதனை பார்வையிட உள்ளார்.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக மதிமுக, தேமுதிக பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன. மேலும் திரையுலகத்தினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான காவற்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல.கணேசன்:

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. இதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுப்பவர்களும்,இலாம் அடைய முயற்சிப்பதால், தமிழக மக்கள் இந்த பிரச்சினையில் இருந்து விலகி நிற்ககூடும் என இல.கணேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் எனவும் தமிழக அரசு இவ்வாறான பேச்சுக்களை அலட்சியப்படுத்தாது, உறுதியுடள் செயல்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு

இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000 பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர்.

ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். புலிகளின் இயக்கம் எப்படிப்பட்டதென அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்மானிக்கக் கூடாது. அதை மக்கள் சொல்வார்கள்.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா... அவல்லது அப்படிப்பட்டவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்கிறார் பால்தாக்கரே. அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று உங்களால் கண்டிக்க முடியுமா? முடியாது, காரணம் அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள்.

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்பில்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்குநூறாகி விட்டதா?.

அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர் இங்கே.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள்... ஒரு சக மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்று கூறிக் கொள்பவர்கள் (காஙகிரஸ்) ஏன் கண்டிக்கவில்லை?.

நம்மிடமிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு நம் இனத்தைச் சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத் தள்ளுகிறான். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது?

மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்றாவது நீங்கள் பேசியது உண்டா? பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதைப் பார்த்து பேசாமல் மெளனமாக இருக்க முடியவில்லை.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21,000 பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகள்.

பொறுத்திருப்போம்... எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

நெல்சன் மண்டேலாவைக் கூட தீவிரவாத பட்டியலில்தான் வைத்திருந்தனர். சுபாஷ் சந்திர போஸ் பெயரையே அந்தப் பட்டியலில் இருந்து இப்போதுதான் நீக்கியுள்ளனர்.

எனவே தயவு செய்து புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்காக அழுகிறோம். நீங்களோ எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார் சீமான்.

ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது : இராமதாஸ்

ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாகக் கு‌ற்ற‌ம்சாட்டியுள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் மருத்துவர் இராமதா‌ஸ், தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த கொடுமையை எதிர்க்க முன்வர வேண்டும் எ‌ன்று‌ம் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு செய்ய மனமில்லாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளையும், வாதங்களையும் எழுப்பி தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எ‌ன்று‌ம் அவர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஈழப் பிரச்சனை என்பது சிங்கள படைகளுக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வருகிற சண்டை மட்டுமல்ல, அது ஈழத்தில் தமிழ் பேசுகின்ற 52 இலட்சம் மக்களுடைய உரிமைப் பிரச்சனை எ‌ன்று கூறினார்.

ஈழத்தில் சம உரிமை கேட்டு போராடி வரும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ராஜபக்ச செயல்பட்டு வருவதாகவும், கு‌‌ற்‌ற‌ம்சாட்டிய இராமதா‌ஸ், இது வேறு ஒரு நாட்டில் நடைபெறுகிற உள் விவகாரம் என்று இந்தியா பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது எ‌ன்று‌ம் மாறாக, உரிமையோடு தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் எ‌ன்றும் கேட்டுக்கொண்டார்.

''ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க மனமில்லை என்றாலும், அவர்களை கொன்று குவித்து வரும் சிங்கள படையினருக்கு மறைமுகமாக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் ம‌த்‌திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' எ‌ன்றும் இராமதா‌ஸ் வ‌லியு‌த்‌தினா‌ர்.
செ‌ன்னை‌யி‌ல் நாளை நடைபெறும் மனித‌ச்சங்கிலியில் தேனாம்பேட்டையில் தானும் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்த இராமதா‌ஸ், இந்த அணிவகுப்பில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எ‌ன்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை இதில் காண்பிக்கக்கூடாது எ‌ன்று‌ம் வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.
அனைத்து‌க்கட்சி கூட்டத்திற்கு பின்னரும் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி தரவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், ''இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள், இந்திய அரசின் சார்பாக உணவும், மருந்தும் நேரடியாக இலங்கைக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வந்தால்தான் திருப்தியாக இருப்போம்'' எ‌ன்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வுடன், பா.ம.க.விற்கு கருத்துவேறுபாடுகள், அரசியல் மோதல்கள் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக அவற்றை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளை பா.ம.க ஆதரிக்கிறது எனவும், இதுதான் தமது நிலைப்பாடு எ‌ன்றும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை

ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும்சர்ச்சைக்குரியவற்றை தவிர்க்க வேண்டும்
இலங்கையின் குடிமக்களான தமிழ்ப்பேசும் மக்கள் மீது இலங்கை அரசு மூர்க்கத்தனமாக நடத்தி வரும் விமான, தரைப்படை தாக்குதல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் கூட சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் காந்தியடிகள் பிறந்த அக். 2ம் நாள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தங்களுடைய மனிதாபிமான ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்மக்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும், இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் படைக்கு இந்திய அரசு எந்த விதமான ஆயுதங்களையும் அனுப்பகூடாது.

அனுப்பிய ஆயுதங்களை உடனே திரும்பப்பெறவேண்டும். குண்டுதாக்குதலால் அகதிகளாக கொட்டும் மழையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றை தாமதமின்றி அனுப்பவேண்டும்.

இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவைத் தந்து தமிழகத்தின் ஒற்றுமையை காந்தி பிறந்தநாளில் வெளிப்படுத்தினார்கள்.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுதும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதைப்போலவே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கத் தவறினால், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வலியுறுத்துவதற்காக அக்டோபர் 24ந் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேயில்லை. இலங்கை அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்துவரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

எனவே தமிழக மக்கள் தங்களது ஆத்திரத்தையும், கவலையையும் தெரிவிக்கும் வகையில் போராடிவருகின்றனர். மாணவர்கள், வணிகர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவத்துறையினர், திரைப்படக்கலைஞர்கள் என்று சமூகத்தின் அனைத்து பகுதியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
உலக தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் இந்த எழுச்சிக்கு பெரிய ஆதரவையும் வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுகூடி இலங்கைத் தமிழர்களின் துயரத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்பதில் தங்களுடைய மேலான விருப்பங்களை வெளியிட்டு வருகிறார்கள்..

இந்த நிலையில் தமிழகத்தின் கடமையும், பொறுப்புணர்வும், மிகவும் கூடுதலாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதில் நமக்கு எச்சரிக்கை வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களை வைத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே அறிக்கைப்போர், விமர்சனப்போர் நடத்துவதை கைவிடவேண்டும். போர் மேகத்தின் குண்டு மழைக்கிடையே நொடிகள் தோறும் செத்துக்கொண்டிருக்கிற தமிழ்மக்களின் பெயரால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதி திரும்பியப் பின் அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முயற்சி செய்யவேண்டும். இதுதான் இப்பொழுது இலங்கை தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்துக்குரல் கொடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இந்தப் பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?

என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்கவேண்டுமென்று சம்பந்தப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் விதத்திலும் அமையவேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்த விரும்புகிறது..

சில அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் தமிழகத்தின் தனித்த அரசியல் சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், இந்தப் பிரச்சனையை தீர்ப்பதில் அவர்களும் முழுமுயற்சி எடுக்கவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

(தா.பாண்டியன்)
மரிநலச் செயலாளர்

பிரிவினைவாத பேச்சு: வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்

நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல்,

புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.

தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.

வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

விரைவில் கண்ணப்பனும் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். க்யூ பிராஞ்ச் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இலங்கை தூதரகம் மீது கல்வீச்சு:

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் புகையிரத மறியற் போராட்டம் - தொல் திருமாவளவன் கைது

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அனைத்திலும் இ‌ன்று வியாழக்கிழமை தொடரூந்து ம‌றிய‌லி‌‌ல் ஈடுப‌ட்ட விடுதலை சிறுத்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌‌திய தொ‌ல்.திருமாவளவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர் கைது செய்யப்பட்டனர். ‌

இ‌ந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.

மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் திருமாவளவ‌னை நுழையாது தடுப்பதற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அரண் அமைத்து ‌நி‌ன்ற போதிலும், அந்த தடையையும் உடைத்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜப‌க்சவு‌க்கு எ‌திராகவு‌ம், இந்திய ம‌த்‌திய அரசு‌க்கு எ‌திராகவு‌ம் முழக்கங்கள் எழு‌ப்ப்பட்டது.

இந்த மறியல் போரா‌ட்ட‌த்தினால் டெல்லியில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு ‌விரைவு தொடரூந்து, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார தொடரூந்து 5 தொடரூந்துகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.

சென்னை மத்திக்கு செல்ல வேண்டிய 12 தொடரூந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தினால் தொடரூந்து போக்குவரத்தில் ‌பல ம‌ணி நேர‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்டது.

இதேவேளை, திரு‌ச்‌சி‌ தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌விடுதலை ‌சிறு‌த்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்தவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதன்போது பே‌சிய மா‌நில பே‌ச்சாள‌ர் த‌மிழரச‌ன், ''ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது கொடூரமாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்கா படைகளுக்கு இ‌ந்‌திய அரசு எ‌ந்த‌விதமான உத‌வியு‌ம் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ந‌ட‌ந்து வரு‌ம் போரை இ‌‌ந்‌திய அரசு உடனடியாக தடு‌த்து‌ ‌‌நிறு‌த்த‌ வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இதேபோ‌ன்று ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் லா‌ல்குடி, ஜெய‌புர‌ம், மண‌ப்பாறை ஆ‌கிய தொடரூந்து ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த நூ‌ற்று‌க்கண‌க்கான ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யின‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

புது‌‌க்கோ‌ட்டை தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌‌ர் அ‌ப்து‌ல் நாச‌ர் தலைமை‌யி‌ல் ம‌‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதேபோன்று தமிழ்நாடு அனைத்திலும் கடைபெற்ற தொடரூந்து மறியல் போரா‌ட்ட‌த்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரக்கனக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறையில் சிறீலங்கா படையினரது படைக்கல பிரதான வழங்கல் கப்பல் தாக்கியழிப்பு

சிறீலங்கா கடற்கடையினரின் வடபுல பிரதான கடல்வழி வழங்கல் தளமான காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் வழங்கல் கப்பல் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 5:10 அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலி சிறப்பு தாக்குதல் அணியினர் காங்கேசனதுறை துறைமுகத்தில் தரித்து நின்ற றுஹுன (Ruhuna), மற்றும் நிமலாவ (Nimalawa) ஆகிய இரு பிரதான படைத்துறை வழங்கல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கு இந்த கப்பல்களை பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவ வழங்கல்களை இந்த கப்பல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை இந்த கப்பல்கள் படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற வேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில் எம்.வி. நிமல்லாவ கப்பல் தீப்பற்றி எரிந்தவாறே மூழ்கத்தொடங்கியது. எம்.வி. றுகுணுவ கப்பல் கடும்சேதங்களுக்குள்ளானது. கரையிலிருந்து விரைந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் அதை மூழ்கவிடாது கரைக்கு இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் மலர துணை நிற்போம்: திரை உலகம் ஆவேசம்

இந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன்;சீமானின் உருக்கமான பேட்டி: தமிழன் எக்ஸ்பிரஸ்

"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது.
ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:-
ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு விமர்சிக்கணும்? அது மகிழ்ச்சி தானே!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழர் பிரச்சினையில் ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"தமிழ் ஈழம் தவிர, தனிநாடு தவிர வேறு தீர்வு இல்லை' என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே அந்த மக்கள் குறித்து சிந்திக்கின்றன என்று அர்த்தம். "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு மாநிலப் பகிர்வு, ஒரு அதிகாரப் பகிர்வு' என்று பேசுபவர்கள் எல்லாம் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதே என் கருத்து. ஏனென்றால் மாநில சுயாட்சி என்பது எல்லாம் இறையாண்மை மிக்க நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவுக்குள்தான் சாத்தியமான விஷயம். இலங்கை போன்ற ஒரு மதத் தீவிர நாட்டில் இறையாண்மையே இல்லை; அப்புறம் எப்படி மாநில சுயாட்சி சாத்தியம்? தமிழர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன? தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு தீர்வு கிடையாது என்பதைச் சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சு போனபோது அதை யாரும் பிரிவினையாகக் கருதலை. அதே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிஞ்சுபோனபோது அதையும் இவங்க பிரிவினையா கருதலை. ஸ்ரீலங்காவில் மொழி, இனம், மதம், பண்பாடு கலாசாரம், வாழ்வியல் அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் தமிழர்கள் அங்கே மாறுபடுகிறோம். அதனால நாங்க தனியா ஒரு நாடு கேட்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கொசாவா இன்னைக்கு விடுதலை அடையும்போது நாங்க ஏன் விடுதலை அடையக்கூடாது? இதை நீங்க தமிழீழத்தில் வாழும் மக்களின் விடுதலையாகக் கருதக்கூடாது. உலகமெங்கும் பரவி வாழக்கூடிய 12 கோடி மக்களின் தேசிய இன விடுதலையாகத்தான் பார்க்கணும். உலகத்தில் எல்லா நாட்டு விடுதலைகளையும், புரட்சிகளையும் ஆதரித்த தேசங்களும், இயக்கங்களும், மனிதநேயமிக்க அமைப்புகளும் எங்கள் விடுதலையை மட்டும் தீவிரவாதமாகப் பார்க்கும் காரணம்தான் என்ன என்பது எங்களுக்கு இதுவரைக்கும் புரியவில்லை.
சர்வதேச நாடுகளை "கன்வின்ஸ்' பண்ண நீங்கள் முயற்சி எடுத்தீர்களா?
நாங்க சர்வதேச நாடுகளில் எல்லாம் போய் பேசறோம். அந்தப் பேச்சின் வடிவத்தை அந்தந்த நாட்டின் மொழிகளில் மொழிபெயர்த்து ஏடுகளில் போடச் சொல்கிறோம். அப்படித்தான் நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பி உலகத்தாரின் கவனத்தை, எங்கள் பக்கம் திருப்புகிறோம். இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற இந்த இன எழுச்சி, சர்வதேசக் கதவைத் தட்டும்னு நினைக்கிறோம். உலக சமுதாயம் ஈழத்தமிழர் பற்றி ஒருமுறை மெளனமாகச் சிந்திக்கட்டும்னு நினைக்கிறோம். இந்த நெருப்பை அணையவிடாம ஏந்தி நாங்கள் எடுத்துச் செல்வோம்.
இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் செய்கிறதா?
இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வந்தாலும் நாங்கள் அவர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறோம். தமிழீழத்தில் வாழும் எல்லா மக்களும் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றே கருதுகிறார்கள். தன் ஆறரைக் கோடி சொந்த உறவுகளை வைத்திருக்கிற ஒரு நாடாகவே அவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். அதனால் இந்தியா பகை நாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை. இப்போது பாகிஸ்தான்காரன் ஒரு நாளைக்கு ரெண்டு கப்பல் ஆயுதங்கள் அனுப்பறான். அதை இறக்காதேன்னு சொல்லணும். விடுதலைப் புலிகளையோ அதன் தலைமையையோ அழிச்சி ஒழிச்சிட்ட பிறகு, அந்தக் கருவிகளை வைத்து சிங்களவன் என்ன செய்வான்? அங்கிருக்கிற பாகிஸ்தானியை, அமெரிக்க துருப்புகளை வச்சிக்கிட்டு என்ன செய்வான்? அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தமாட்டான்னு நீங்க எப்படி நம்புறீங்க? 70 குண்டுகளை ஒரே நேரத்தில் வீசுகின்ற ஒரு பல்குழல் பீரங்கியை பாகிஸ்தான் கொடுத்திருக்குது. அங்கே மன்னாரிலிருந்து அடிச்சா, அது மதுரையில் வந்து விழும். இது இந்தியாவுக்குத் தெரியுமா? தெரியாதா? அதனாலதான் ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றோம்.
ஆனால் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்களே?
அது தவறு. பிரபாகரனும், ஈழ மக்களும் இந்தியாவின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இந்திய தேசத்து மீனவர்கள் 306 பேரை இதுவரை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அச்சுறுத்தல் இல்லையா? பிரதமர் சொல்லியிருக்கிறார். இனிமேல் செய்யவில்லை என்கிறார்கள். பாதுகாப்புச் செயலர் நாராயணன் முதல்வரிடம் உத்தரவாதம் தருகிறார், இனிமே நடக்காதென்று. அவர் டெல்லி போய் இறங்கவில்லை... சுட்டு வீழ்த்தி விட்டார்கள். கச்சதீவு எங்கள் சொத்து. அதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவனை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து சுடுகிறான் என்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? இதை ஏன் இந்தியா கண்டிக்கலை? உண்மையில் யார் அச்சுறுத்துவது? உன் தேசத்து மக்களை தினம் சுட்டு வீழ்த்திகிட்டிருக்கிறது இலங்கை இராணுவமா? இல்லை விடுதலைப் புலிகளா?
ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகள் தானே?
இந்தியா, தமிழீழம் மலர்வதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதால் அதற்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. அதற்கு ஒரு முகமூடி இருக்கிறது. அது ராஜீவ்காந்தியின் மரணம். அப்படியென்றால் ராஜீவ்காந்தியின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்குகிறீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; நாங்கள் அனைவரும் செத்து ஒழியத் தயார். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ராஜீவ்காந்தியின் மரணத்தைப் பேசுகின்ற பெருமக்களுக்கு தேசப்பிதா காந்தியின் மரணத்தைப் பற்றிப் பேச தைரியம் இருக்கா? அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறை கூற தைரியம் இருக்கா? ராஜீவ்காந்தியின் அம்மா இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்திய சீக்கியர் பற்றி அந்த அம்மையாரின் நினைவு தினத்திலேயோ, பிறந்த நாளிலேயோ பேசுவதற்கு ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவருக்காவது தைரியம் இருக்குதா?
காங்கிரஸ் தலைமையிலான அரசில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பது இரட்டை வேடம்தானே?
இந்த மண்ணுக்கான அரசியல் வேறு; தமிழீழத்துக்கான அரசியல் வேறு. இந்த மண்ணுக்கான அரசியலை செய்து, வென்று செல்வாக்கில் இருந்தால்தான் நீங்கள் அந்த மண்ணுக்கான அரசியலைச் செய்ய இயலும். இப்போ திருமாவளவன்ற மிகப் பெரிய போராளியை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அந்தக் கட்சியை, ஒரு சின்னம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்க்கப் போராடுகிற போராட்டமே அவருக்குச் சரியாக இருக்கு. கொள்கை அளவிலயோ, உழைப்பிலேயோ, தியாகத்திலேயோ நோக்கத்திலேயோ அவரை நீங்க யாரோடும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆனா ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுப்பிரச்சினை என்று வரும்போது ஒன்றாகிறார்களா? ஒருமித்து வருகிறார்களா என்பதுதான் நமக்குத் தேவை.
நடிகர், நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிவித்திருக்கும் போராட்டம் பற்றி?
அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான்தான் அதைச் செய்ய விரும்பி சரத்குமார் ஸார், பாரதிராஜா அப்பா உட்பட எல்லார்கிட்டேயும் பேசினேன். அடிப்படையில் அவங்களும் உணர்வுள்ள தமிழர்கள். அதனால் இது குறித்து நல்ல ஒரு புரிதல் இருந்தது. இது கடமை. தமிழன் காசில், உழைப்பில் தான் நாம வாழறோம். அவன் பணம் வேண்டும்; ஆனால் அவன் உயிர் வேண்டாமா என்கிற கேள்வி எழுது. சக தமிழனா இல்லைன்னாலும், சக மனுஷனா அவனது படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது நம் கடமை.
நெய்வேலி காவிரிப் போராட்டம், ஒகேனக்கல் உண்ணாவிரதம் போன்று இதையும் சிலர் அரசியலாக்கிவிட்டால்..?
இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை, உயிர்ப் பிரச்சினை என்பதால அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
சந்திப்பு: நரேந்திரா கமல்ராஜ்

சிறீலங்காவிற்கு வன்னியில் பேரழிவு - கொல்லப்பட்ட, காயம்பட்ட படையினரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆறு முனைகள் ஊடான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சிறீலங்காப் படை தரப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடும் இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக சிறீலங்கா படை தரப்பை ஆதராம்காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டதோடு, 48 பேர் காயமடைந்ததாக படைதரப்பு கூறியுள்ளது. எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் தற்போது கொல்லப்பட்டும், காயம்பட்டும் கொண்டு வரப்பட்டுள்ள படையினரால் நிரம்பி வழிவதாகவும், இவ்வாறு நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது காயம்பட்ட படையினர் தரம்பிரிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஏனைய மருத்தவமனைகளுக்கு அனுப்பிவைக்க அவசர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்த இழப்பானது கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட மிக அதிகமான இழப்பு என சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும் இழப்புக்களுக்கும் இடையில் இன்று திங்கள் வரை படையினர் வல்வளைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுடிருக்கின்றனர் என களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம், 48 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம் என சிறீலங்கா தரப்பு அறிவித்தக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சியை நெருக்க முடியாதளவிற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக ளமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சண்டையில் தமது முழுமையான ஒட்டுமொத்த பலத்தையும் சிறீலங்கா தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கிபிர், மிக்-27 மிகையொலி தாக்குதல் விமானங்களின் குண்டு வீச்சு, எம்.ஜ 24 தாக்குதல் உலங்குவானூர்தியின் தாக்குதல்கள், பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல், கனரக வாகனங்களின் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை நான்கு நாட்களாக மேற்கொண்டுள்ளனர்.
சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைப் படைதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவிக்கும் அதேவேளை, தமது தரப்பில் இழப்புக்கள் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. இந்தச் சண்டையில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

ஈழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைத்தோம்.
நடேசனும் நமது கேள்விகளுக்கான பதில்களை பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய பேட்டியிலிருந்து...

1980 களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு அதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து?
இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரசபடைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழகமக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை அகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் ஏற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும். சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்' என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?
தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம். உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவரு மான ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு இழப் பிரச்சினையில் அதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல? உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?
இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. இராணுவ தளபாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், இராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆதனால், இலங்கை இராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.
இலங்கை இராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?
உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும். போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து புலிகளை பலவீனப்படுத்தி விட்டோம் என்கிறதே இலங்கை இராணுவம்? எங்கள் மீது இராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள இராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் அதிபர் ராஜபக்சே. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் அதிபர் ராஜபக்சேவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் இராணுவ வலிமை முன்னெப்போதும்போல் பலமாகவே இருக்கிறது. விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், புலிகளின் விமான ஓடுபாதை, சந்திக்கும் இரகசிய இடங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள இராணுவம் கூறி வருகிறதே? எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. இராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது இராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது இராணுவம்.
சமீபத்தில்கூட எங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?
தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.
வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?
இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிலிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்துவிட்ட நிலையிலும், எமது மக்களின் முழுபலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.
கருணாவை இலங்கை எம்.பி.யாக மகிந்த ராஜபக்சே நியமித்திருப்பது பற்றி?
தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்சே. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்சேவால் வழங்கப் பட்ட ஒரு "கைக்கூலியாகவே அதனைப் பார்க்கின்றோம்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவி அளித்து வருவதாக நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள்? அந்த அடிப்படையில் அதனை முன்வைக்கிறீர்கள்?
இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதத் தளபாடங்களை இந்தியா வழங்கி வருவதாகவும் பயிற்சி அளிப்பதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. வவுனியா தளத்தில் ராடார் கருவியை இயக்குவதற்கான பயிற்சியை சிங்கள இராணுவத்தினருக்குக் கொடுக்க இந்திய தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் செயல்பட்டு வந்தனர் என்பதும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு அண்மையில் தெரியப்படுத்தப்பட்டது. அது எங்களுக்கு கவலையளிக்கிறது.
இலங்கை அரசு மேற்கொண்டு வரும் யுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் உள்ளது என கருதுகிறீர்களா?
சிறீலங்கா அரசின் அரசியல், இராணுவ நிலைப்பாடுகளைப் பொறுத்தே அவ்வாறான சூழலை எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்த காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அவர்களே தாமாக விலகியது மட்டுமல்லாமல் இராணுவத் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினையில் எந்த மாதிரியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எமக்கு ஆதரவு நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
சமீபத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் துணை தளபதி ஜானக பெரேராவை உங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படை கொன்றுள்ளதே?
அவ்வாறான சம்பவங்களின்போதெல்லாம் எமது இயக்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே வழமையான நட வடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள இராணுவம். சிங்கள இராணுவத்தினருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அளவிற்கு முரண்பாடுகள் உள்ளன. "தற்கொலைப்படைத் தாக்குதலையும் அப்பாவி சிங்களவர்களையும் அழிக்கும் புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது' என்று இந்தியாவிடம் இலங்கை அரசு கூறிவருகிறது. அந்தநிலையில், தமிழர்களுக்குச் சாதகமான ஒரு பங்களிப்பை இந்தியாவிடம் புலிகள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே? நாங்கள் ஒருபோதும் அப்பாவி சிங்களவர் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிற ஒர் விடுதலை இயக்கம் எங்களுடையது. எந்தவொரு சாதாரண மக்களையும் கொல்வதால் பிரச்சினைக்கு தீர்வு எற்பட்டுவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பவர்கள். இந்திய அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றோம். ""புலிகளின் தலைவர் பிரபாகரன் நீண்டகாலம் பதுங்கு குழியில் வாழ்ந்துவிட முடியாது என்றும் அவர் சரணடைந்துவிட வேண்டுமென்றும்'' இலங்கை இராணுவம் எச்சரித்து வருகிறதே?
பதுங்கு குழிகளில் வாழவில்லை. மக்களுடனேயே வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வருகிறோம். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவம் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவது வழமையான ஒன்று. தற்போதைய நெருக்கடியான களச்சூழலில் என்ன மனநிலையில் உள்ளீர்கள்? உறுதி தளராத நம்பிக்கையுடன் எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் மனோவல்லமையுடன் இருக்கிறோம். கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவ்வாறான சந்தர்ப்பங்களை யெல்லாம் எமக்கு சாதகமாக மாற்றியுள்ளோம். எங்களது உறுதி தளராத மனநிலையைப் பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் இந்திய அமைதிப்படையின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களே பாராட்டி எழுதியுள்ளனர். எந்த நெருக்கடிகளிலும் உறுதி தளராத மனோதிடம் பெற்றுள்ளோம். பிரபாகரன் வெளிநாட்டிற்கு அகதியாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக இலங்கை இராணுவம் கூறி வருவது பற்றி? வழமையான பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை.
பிரபாகரன் சரணடைந்தால் உயிரோடு இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்சே?
ராஜபக்சேவின் பல கனவுகளில் இதுவும் ஒன்று. முப்பது வருடமாக நீடித்துவரும் இனப் பிரச்சினையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? எமது மக்களுக்கான விடுதலை கிடைக்கும்வரை தொடர்ச்சியான வளமையான ஆதரவை நல்கி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு செயல்பட வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.
சர்வதேச நாடுகளுடனான புலிகளின் தொடர்புகள் நீடிக்கின்றனவா? சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எங்களின் வழமையான தொடர்புகள் இருந்து வருகின்றன. இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறீர்களா? அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சிகொண்ட நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?
1977 ம் ஆண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நக்கீரன்.

தமிழீழக் கதவுக்கான சாவி உலகத்தமிழன் ஒவ்வொருவனின் கைகளிலும் உள்ளது - சீமான்

தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக்களைந்துவிட்டு, தமிழனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரு மையத்தில் இணைவேண்டும் என்பது அண்ணன் பிரபாகரனின் ஆசையாகும் என தமிழ்த்திரைப்பட இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான சீமான் தெரிவித்துள்ளார்.குமுதம் சஞ்சிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அந்த செவ்வியில் மேலம் கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தமிழ் ஈழத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன, அனால் அவற்றுக்கான திறவுகோல்கள் உலகத்தமிழன் ஒவ்வொருவனுடைய கைகளிலும் உள்ளன.எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்தக்கதவை திறக்கவேண்டிய பெரும் கடமையுடையவர்களாக உள்ளோம்.ஈழத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தமிழன் மரணத்தைச் சந்தித்துவருகின்றான். உணவு மற்றும் மருத்துவம், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு தமிழினம் அவதிப்படுகின்றது.இந்த நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்து என்ன முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கோ தி.மு.க அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்தன.அ.தி.முக. புறக்கணித்ததில் எவருக்கும் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ம.தி.மு.க செயலாளர் வைக்கோ அதை புறக்கணித்ததுதான் உலகத்தமிழதையே திடுக்கிடவைத்துள்ளது.அ.தி.முக. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அவர்களோடு இணைந்து ம.தி.முக. புறக்கணித்தது என்பதுதான் வேதனையாக உள்ளது.முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அரசியல்க் காரணங்களுக்காக பா.ம.க தி.முக. கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் ஈழத்தமிழர்களுக்கான விடயம் என்பதால் மருத்துவர் ராமதாஸ் அந்தக்கூட்டத்தைப் புறக்கணிக்காமல் கலந்துகொள்ளவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் கனவு பலிக்காது!! - கனிமொழி ஆவேச பேட்டி

இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படி நிர்ப்பந்திக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்'' என்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் நிறைவேறிய மறுநாளே, முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி அவரது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் பரபரவென பரவியது. இம்மாதம் 29-ம் தேதியிட்ட அந்த ராஜினாமா கடிதத்தை கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.அதன் எதிரொலியாக `அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கனிமொழி மீது ஒரு வசை கணையை வீசினார். `கனிமொழியின் ராஜினாமா என்பது ஒரு வடிகட்டிய மோசடி. ராஜினாமா கடிதத்தின் காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவுக்கு இல்லை' என வசைமாரி பொழிந்துள்ளார்.இதுதொடர்பாக நாம் கனிமொழியிடம் விளக்கம் கேட்டுத் தொடர்பு கொண்டபோது, முதலில் பேசத் தங்கியவர், சிறிது நேரத்திற்குப் பின்னரே பேச முன்வந்தார்.

வழக்கமாக கனிவான குரலில் பேசும் அவர், இந்த முறை கோபம் கொப்புளிக்க நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய முன் வராவிட்டால் லோக்சபா உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ராஜ்யசபா எம்.பி.யான நீங்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்தீர்கள்?
``ராஜ்யசபா எம்.பி.க்களும் பதவி விலகுவார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, `அவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தலைவர் பதிலளித்துள்ளார். அதனால்தான் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.''

மத்திய அரசிற்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், நீங்கள் உடனே ராஜினாமா செய்தது `சுய விளம்பரத்திற்காக' என்று கூறப்படுகிறதே?
``நான் சுய விளம்பரம் தேடிக்கொள்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் முன்னிலையில் அல்லவா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும்? நான் ராஜினாமா கடிதத்தைத் தலைவரிடம் கொடுத்தபோது எடுத்த படம் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா? இல்லையே! இந்த நிலையில் இதில் சுய விளம்பரம் தேட என்ன உள்ளது?

'' மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவிக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான், நீங்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே?
``மற்றொரு கட்சியில் உள்ள எம்.பி.யை ராஜினாமா செய்யச் சொல்லி எப்படி நிர்ப்பந்திக்க முடியும்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படியும், எங்கள் தலைவர் அறிவித்ததாலும் நான் ராஜினாமா செய்தேன். அதுபோல், அவர்களது கட்சி முடிவுப்படி அவர்கள் செயல்படுவார்கள்.

''இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், ராஜினாமா கடிதத்தை கனிமொழி ராஜ்யசபா தலைவரிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவரது தந்தையிடம் கொடுத்ததால் எழுதப்பட்டிருக்கிற காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவிற்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``நான் ராஜினாமா கடிதத்தில் என்ன எழுதியுள்ளேன் என்று அவர் நேரடியாக வந்து படித்துப் பார்த்தாரா? என்ன அர்த்தத்தில், எந்த ஆதாரத்தில் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ராஜ்யசபா தலைவருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தைத்தான் எங்கள் கட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதனை, ராஜ்யசபா தலைவருக்கு அவர்கள் அனுப்பி விடுவார்கள். எனக்கு தலைமையை மீறி செயல்பட்டுப் பழக்கமில்லை.'
'`லோக்சபாவிற்கு முன் கூட்டியே தேர்தல் வந்தால், எம்.பி.க்களின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிந்து விடும். எனவே, இன்னும் முப்பது மாதங்கள் பதவிக்காலம் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``இந்தக் கேள்வி, `சட்டசபைக்குத் தேர்தல் வராதா?' என்ற ஜெயலலிதாவின் ஆசையைத்தான் காட்டுகிறது. எப்படியாவது சட்டசபைக்குத் தேர்தல் வந்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காது. ஈழத்தமிழர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா, தற்போது முற்றிலும் முரண்பாடாகப் பேசுகிறார். இதுதான் சந்தர்ப்பவாதம்.''1980-ல் தமிழீழத்திற்காகக் குரல்கொடுத்த கருணாநிதி, தற்போது, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?``அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி கலந்துகொண்டு,முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகளைப் பாராட்டியுள்ளாரே?''
இரா. முருகேசன்

"எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி.--ஜூனியர் விக

''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி,
மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார்.

அவரை நாம் சந்தித்தோம்.
''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மருத்துவர் ராமதாஸ், நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், இடதுசாரித் தலைவர்கள், திருமாவளவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினேன்.
இப்போது அடுத்தகட்டமாகப் பிரதமரையும் சந்தித்துப் பேசுகிற முடிவில் இருக்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து எடுத்திருக்கிற ஒத்துணர்வான முடிவு, இந்திய அரசுக்கு எச்சரிக்கையாக அமையும். ஈழ பிரச்னையில் சுமுகச் சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமை நிறைவேற்றப்பட, தமிழகத் தலைவர்கள்தான் துணை நிற்க வேண்டும். இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் கைகொடுப்பும் எங்கட தமிழர்களுக்கு உறுதியான விடிவைக் கொடுக்கும்'' என பீறிட்ட நெகிழ்வுடன் பேசத் தொடங்கினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

''ஈழத்தின் இப்போதைய நிலைபற்றி பலவாறான செய்திகள் வருகின்றன. அங்குள்ள உண்மையான நிலை என்ன?''
''சிங்கள ராணுவத்தின் இனஅழிப்பு வெறி உச்சகட்ட மாகி விட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் வேர றுக்கும் கொடூரப் போரை நடத்திவருகிறது சிங்கள அரசு. ஒரு பொத்தானை அழுத்தினால், எழுபதுக்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும் பல்குழல் பீரங்கிகளையும், சீனா, பாகிஸ்தான் போன்ற வேற்று தேசங்களின் நவீன ராணுவக் கருவிகளையும் கொண்டு, தமிழர் பகுதிகளை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். கிளிநொச்சியில் குண்டு மழை பொழிந்து, தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்துவிட்டனர்... இன்றைக்கு கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஜீவன் கூட இல்லை. அந்த நகரமே தரைமட்டமாகி விட்டது. சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்குப் பயந்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் சனங்கள், அங்கேயும் அண்ட நிழலில்லாமல், பாம்புக் கடிக்கும் பசிக் கொடுமைக்கும் ஆளாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தையும் மீன் பிடிப்பையும் நம்பி உழைத்து வாழ்ந்த எங்கட சனங்கள், ஒரு சாண் வயிற்றுக்காகப் பிறர் கைகளை எதிர்நோக்கி வாழ வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். மீன்பிடிப்புக்கு முழுசும் தடை போடப்பட்டு விட்டது. வைத்திய சாலைகள் மூடப்பட்டு விட்டன. தமிழ் சனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வாய்வார்த்தைகளால் சொல்லி மாளாது!''

''ஐ.நா-வின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தமிழர்களுக்கு உதவவில்லையா?''
''ஐக்கிய நாட்டு சபையின் தொண்டு நிறுவனங்கள், மூன்று வாரங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறி விட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மட்டும்தான் இப்போது இலங்கையில் இருக்கிறது. அதுவும் சுடப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் புலிகளின் பிணங்களை அள்ளிச்செல்லும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது... எங்கட மக்களின் சிரமங்களுக்கு அவை ஏதும் செய்யவில்லை. இப்போதைய எங்களின் ஒரே எதிர்பார்ப்பு தமிழகத்தை நோக்கித்தான். குண்டடிப்பட்டும், கொடூரமாகக் குதறப்பட்டும் கிடக்கிற எங்கட மக்களுக்குத் தமிழகத்தின் உதவியால்தான் விடிவு பிறக்கும். ஈழ மண்ணில் தோராயமாக 35 லட்சம் தமிழ் வாழ் சனங்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் ஒருவிரல் எமை நோக்கி நீண்டால்கூட போதும்... எங்களின் இன்னல்கள் களையப்பட்டு விடும்!''

''விடுதலைப்புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்று வரும் செய்திகள் பற்றி..?''
''சந்திரிகா காலத்தில் ஒரு வருடமாகப் போராடி சிங்கள ராணுவம், புலிகளின் மண்ணை 20 கிலோமீட்டர் தூரம் கடந்தது. அப்படி பிடித்த மண்ணை, அடுத்த சில மணி நேரங்களிலேயே மீட்டெடுத்தனர் புலிகள். இதுநாள்வரை ஆறாயிரம் முறை சிங்கள ராணுவம் விமானத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அவற்றை எதிர்கொள்கிற அசாத்திய பலம் புலிகளிடம் இருந் திருக்கிறது... நாங்கள் அறிந்தவரை, கெரில்ல தாக்குதலை வைத்தே இன்னும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் சிங்கள அரசுக்குப் புலிகளால் சவாலைக் கொடுக்க முடியும். சிங்கள அரசும் புலிகளும் சொல்லும் போர் நிலவரங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையை ஆராய்ந் தால்தான் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு புரியும். அதிலும், கடந்த இரண்டு வாரங்களாக சிங்கள ராணுவத்தால் ஒர் அடியைக்கூட எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் உயிருணர்வுப் போராட்டத்துக்கு முன், சிங்கள அரசின் வெறித்தனப் போக்கு ஒருபோதும் வெல்லாது!''

''தாங்கள் சந்தித்த தமிழகத் தலைவர்களிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்?''
''அங்கே எங்கள் தமிழ் சகோதரிகள் விதவைகளாகவும், முதிர் கன்னிகளாகவும் தத்தளித்துக் கிடக்கிறார்கள். தாய், தகப்பன் மரிக்கிறபோது சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டி, வேறு கதியற்று, பெண்களே கொள்ளி வைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடும், கலாசாரமும் பூண்டோடு அழிக்கப்படுகிறது. வாரிசற்ற சமூகமாக எங்கள் மண் மாறுவதற்குள், தக்க தீர்வு ஏற்பட வேண்டும். அது எங்களின் தொப்புள்கொடி சொந்தமான தமிழகத்தின் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் நான் சந்திக்கும் ஒவ்வொரு தலைவரிடமும் வலியுறுத்தி சொல்லிவருகிறேன்'' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
பரிதவிப்பில் கனத்துப் போயிருந்த அவருடைய விழிகளில், விடியலுக்கு ஏங்கும் ஈழ மண்ணின் ஏக்கம் இழையோடியது.

நன்றி: ஜூனியர் விகடன், Oct 22, 2008