கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் தாயும் மகளும் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நான்கு தடவைகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நான்கு தடவைகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

பொதுமக்களின் 12 வீடுகள், கால்நடைகள், பயன்தரு மரங்கள் உட்பட அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடு போன்று குடியிருப்பு பகுதி காட்சியளிக்கின்றது.

பெருமளவிலான மக்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் தேடிக்கொண்டதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதலில் பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான அருமைநாதன் சந்திராதேவி (வயது 50) சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இவரின் மகளான அ.அச்சிகா (வயது 10) மற்றும் மனோகரன் உசா (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி அண்மையில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வு எழுதியிருந்தார்.

குமரபுரத்தைச் சேர்ந்தவர்களான தா.அருமைநாதன் (வயது 52)

இவரின் மகனான அ.அஜிதன் (வயது 12)

த.சிவானந்தன் (வயது 39)

க.யோகம்மா (வயது 65)

சிறிகாந்தா துவாரகன் (வயது 13)

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த ஆறாவது நபரின் பெயர், விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கிளிநொச்சி நகருக்கு வடக்காக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் பரந்தன் உள்ளது.

அதேநேரம், இன்று காலை 7:15 நிமிடமளவில் முரசுமோட்டை முருகானாந்த மகாவித்தியாலத்தை அண்மித்த மக்கள் குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களின் வாழ்விடங்கள் சேதமாகியுள்ளதுடன் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காகப் பாடசாலை சென்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய வைகோ கைது

மத்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்துள்ளதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இனப் படுகொலையில் நாள்தோறும் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இனப் படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் வைகோ தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தும்படி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதில் இந்தியா வழங்கிய ராடார் கருவிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு பிரதமர் அளித்த பதில் கடிதத்தில் தமிழர்களுக்கு எதிராக ராடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு மருந்து பொருட்கள், உணவு ஆகியவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் 18 மாதங்களாகியும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதனைத் தடுத்து நிறுத்தியதில் முக்கிய காரணம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான். இதனை அறுதியிட்டு குற்றஞ்சாட்டுவேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் தான். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாகத் தந்தி கொடுக்கும்படி முதலமைச்சர் கருணாநிதி அவருக்கே உரித்தான ஜெகஜ்ஜால பாணியில் அறிக்கை விடுகிறார். கேட்ட இலாகாவைக் கொடுக்காவிட்டால் மந்திரி பதவி ஏற்க மாட்டோமென்று மிரட்டல் விடுத்த அவருக்கு மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று மிரட்டாதது ஏன்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவோம் என்ற நாடகத்திற்கு நாங்கள் இடம்தரமாட்டோம். இவ்வாறு வைகோ பேசினார். முன்னதாக மதிமுகவின் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழர் தேசிய கட்சியின் தலைவர் பழநெடுமாறன், இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுடன் வைகோ, காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து சாஸ்திரி பவன் நோக்கி மறியல் போராட்டம் செய்வதற்காக அணி அணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ஐ.நா.வில் தமிழில் பேசவேண்டாம்; தமிழருக்கு உரிமை வழங்கினாலே போதும்: அரியநேத்திரன் எம்.பி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா.வில் தமிழில் பேச வேண்டியதில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கினாலே போதுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி அமைச்சின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
வடக்கு, கிழக்கில் கல்வி தொடர்பாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. கல்வியில் வரலாறு என்பது முக்கியம். இலங்கையை பொறுத்தவரையில் வரலாற்றை மாற்றிக் கூறுவது இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்து கூட வரலாற்றை திரிபுபடுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கை சிங்கள இனத்துக்குரியதென்ற தொனியில் கனேடிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அரசியல் வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக வரலாற்றை மாற்றிக் கூறி வந்த நிலையில், இராணுவத் தளபதியும் வரலாற்றை திரிபு படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை எப்படி அழிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தமிழில் பேசும்போது, இங்கு தமிழ் மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி ஐ.நா.வில் தமிழில் பேச வேண்டியதில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே போதுமானது.
இதேநேரம், இனப்பிரச்சினைக்கு, பல்வேறு விடயங்கள் காரணமாக இருக்கின்ற போதிலும், கல்வி உரிமை மறுக்கப்பட்டதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர்
யுத்தம் நிறுத்தப்பட்டால், இந்தக் குறை நிரப்பு பிரேரணைகள் தேவைப்படாது. செலவு குறைவடைந்து அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும்.
இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 270 ஆசிரியர்கள் பற்றாக்குறையும் 75 விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறையும் 66 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றன. தற்போது பட்டதாரிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்னும் நியமனங்கள் வழங்கப்படாத பல பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். எனவே, அந்தந்த பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப் படுமாயின் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 14 ஆம் தேதியன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தினை எதிர்வரும் அக்டோபர் 14ம் நாளன்று கூட்டியிருக்கிறார்.
இலங்கைப் பிரச்சனையில் தனது நிலையை விளக்க கடந்த திங்கட்கிழமை திமுக ஏற்கனவே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாகப் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்: ஜெயலலிதா

சுயநிர்ணய உரிமை வேண்டி ஈழத் தமிழர்கள் நடத்தும் தார்மீகப் போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம் என்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் கேள்வி-பதில் விளக்கமும், செயல்பாடும் வேடிக்கையாக உள்ளன. தன்னுடைய மைனாரிட்டி அரசின் செயல்படாத தன்மையையும், கடமை தவறிய முறைகளையும், குறைகளையும் யாராவது சுட்டிக்காட்டினால், அதற்காக மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி பிரச்சினையில் இருந்து நழுவி தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தில் இறங்கிவிடுகிறார் கருணாநிதி.
இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டுச் சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன்.
தனது குடும்பத்தாருக்கும், தனது கட்சி விசுவாசிகளுக்கும் செல்வம் கொழிக்கும் பதவிகளைப் பெற, மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கைத் தயக்கமின்றிப் பயன்படுத்துகிறார்; இந்திய அரசை மிரட்டுகிறார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், சென்னையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிடுவதோடு நின்று விடுகிறார் என்பதை நான் சுட்டிக் காட்டியிருந்தேன். என்னுடைய அறிக்கையினால், எனது குற்றச்சாட்டினால், "தமிழினத் தலைவர்" என்று தனக்குத் தானே வழங்கிக் கொண்ட பட்டத்திற்கு ஆபத்து ஏற்படுவதைக் கண்டு நிலைமையைச் சமாளிக்க, கருணாநிதி என் மீது குற்றம் சுமத்துகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் நிலையில்லாமலும், மனம் போனபடியும் பேசுவதாகப் பழி சுமத்துகிறார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே. 1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.
2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
3. சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீகப் போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து, ஏற்றுக் கொள்கிறோம். பகை மூண்டு, திசை மாறிப்போன ஆயுதப் போராட்டத்தினால், பல்லாயிரம் தமிழர்கள் அத்தகைய பகையில் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம்.
அத்தகைய சகோதரப் பகையினால் மூண்ட ஆயுதப் போரின் விளைவாக, இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம். தமிழர் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தலைவர்கள் இலங்கை மண்ணிலேயே கொன்று குவிக்கப்பட்டதை, பல தமிழ்த் தலைவர்கள் வெடிகுண்டு வீசிப் பொசுக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.
தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியதியாவின் சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மையும் சீர்குலைவதை ஒருநாளும் ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. தனது சுயநல நோக்கத்திற்காக ஒன்றோடு ஒன்றைக் குழப்பி, எங்கள் நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்த தனக்கே உரித்தான பாணியில் கருணாநிதி முயல்கிறார். மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தான் நான் கேட்டேன்.
நான் இப்படி வலியுறுத்திக் கூறியதால், "பிரதமருக்கு எல்லோரும் தந்தி அனுப்புங்கள்" என்று ஒரு அதிமேதாவித்தனமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்த அறிவிப்பு மக்களிடம் எடுபடவில்லை, அவ்வாறு செய்ய மக்கள் தயாராக இல்லை என்பது தெரிந்ததும், மத்திய கூட்டணி அரசை விட்டே வெளியேறுவோம், அதைப் பற்றியும் யோசிப்போம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறையை தரவில்லை என்பதால், 2004 ஆம் ஆண்டு மே மாதம் டில்லிக்கே சென்று, ஏழு திமுக அமைச்சர்களையும் பதவி ஏற்க வேண்டாம் என்று உத்தரவிட்டவர் தான் கருணாநிதி. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் திரு. கே. சந்திரசேகர் ராவ், தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுக்கொடுக்க முன்வந்து, அன்றைக்கு டி.ஆர். பாலுவுக்கு அந்தத்துறை ஒதுக்கப்பட்டதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காப்பாற்றப்பட்டது. இல்லையேல் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அரசு சில நாட்களுக்குள்ளாகவே கவிழ்ந்திருக்கும். தனது சுயநலம் என்றால், கருணாநிதி எதுவரை செல்வார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
ஆனால், தமிழர்களின் நலன் என்று சொன்னால், கருணாநிதி பொதுக்கூட்ட மேடைகளில் முழங்குவார். எல்லோரையும் தந்தி கொடுக்கச் சொல்வார். தமிழ் மக்கள் நலனில் அவருக்கு உள்ள அக்கறை இவ்வளவு தான்!
தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இடம்பெயர்ந்து, வசிக்க இடமில்லாமல், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ண உணவு, தங்க இருப்பிடம், மருந்து ஆகியவை இல்லாமல் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் உக்கிரத் தாக்குதலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல மாதங்களாக இந்த நிலைமை தான் இலங்கையில் நிலவுகிறது. தந்திகள் அனுப்புவதனாலோ, அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பதனாலோ, பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.
மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து எள்ளளவாவது கவலை இருக்க வேண்டாமா? உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் கலைஞருக்கு வரைந்த மடல்

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் வரைந்த மடல். அதன் விபரம் வருமாறு.
பேரன்பிற்குரிய மாண்புமிகு கலைஞர்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள்.
தமிழக முதல்வர்
தமிழ்நாடு,
இந்தியா..

வணக்கம். வாழ்க வளமுடன்,
தங்களுக்கு 9 9 2008 அன்று எழுதிய கடிதப் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 06 10 2008 வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு 42 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் போற்றுகிறது பாராட்டுகிறது.
அது மட்டுமல்ல தங்கள் உரையில் ஈழத் தமிழர்களின் புரட்சிப்பூ ,விடுதலைப் பூ, ஜனநாயகப் பூ,புதுமைப் பூ இரத்த அபிசேகம் நடைபெறாமலே வளர வேண்டும் என்ற கருத்து உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களிடையே நாளைய வாழ்விற்கு உத்தரவாதம் இன்றி சொந்த நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். சொந்த நாட்டில் எமது மக்கள் தினம் தினம் கொலை, கற்பழிப்பு, காணமல் போதல், சிறை, சித்திரவதை போன்ற கொடுமை நிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே தங்களுடைய காலத்தில் ஈழத்தமிழர்களின் உயிர்,உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட மேலும் தங்கள் பணி தொடருவதுடன் தாய்த் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சேய்த் தமிழீழத்தில் வாழும் எமது தொப்புள்க்கொடி உறவுகளைக் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு உலகத்தில் வாழும் எட்டுக்கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் சார்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தங்களை அன்புடன் வேண்டுகிறது.
நன்றி
பணிவன்புடன்
துரை.கணேசலிங்கம்
09 1 2008

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாக்கு நீரிணையில் வைத்து சுமார் 60 மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 15 வர்த்தக மீன்பிடி வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தமிழக மீனவர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களினால் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பெறுமதி வாய்ந்த பொருட்களை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜீ.பி.எஸ். உபகரணம், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட 15 லட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினையில் விஜயதுங்கவின் நிலைப்பாட்டால் தமிழ் மக்கள் வேதனை - சபையில் சம்பந்தன்

ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க டி.பி. விஜயதுங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிருந்தாலும் அவரது இனப்பிரச்சினை தொடர்பான கருத்துகள் தொடர்பில் தமிழ் மக்கள் பெரும் வேதனையடைந்திருந்தனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது;
டி.பி. விஜயதுங்க மதிநுட்பமானவர். கவர்ச்சிகரமானவர். ஆனால், அவர் தேசிய இனப்பிரச்சினை குறித்து வெளியிட்ட கருத்துகளோடு எம்மால் இணங்கிச் செல்ல முடியாது. அவரது கருத்துகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையடைந்திருந்தனர்.
டி.பி. விஜயதுங்க ஒருபோதும் அரசியல் பதவிகளை நாடிச் சென்றவரல்ல. பிரேமதாச ஜனாதிபதியாகவிருந்தபோது பலர் பிரதமர் பதவியில் கண் வைத்திருந்தனர். ஆனால், அப்பதவி விஜயதுங்கவை நாடி வந்தது. அதேபோன்றே பிரேமதாசவின் மரணத்தின் பின் விஜயதுங்க ஜனாதிபதியானார்.
இலங்கையின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய டி.பி. விஜயதுங்கவின் மறைவு அனைவருக்கும் இழப்பானது.