இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாக்கு நீரிணையில் வைத்து சுமார் 60 மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 15 வர்த்தக மீன்பிடி வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தமிழக மீனவர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களினால் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பெறுமதி வாய்ந்த பொருட்களை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜீ.பி.எஸ். உபகரணம், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட 15 லட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: