பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக வந்த நாடுகளில் மியன்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் நாடும் ஒன்று. அரச ஊடகங்களில் இந்த நாட்டின் உதவி தொடர்பில் மிகவும் உற்சாகமான கதைகள் வெளியிடப்பட்டன. இலங்கை உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு எனில் பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய GTNற்கு அனுப்பி வைத்துள்ள தனது சிங்கள மொழியிலான விசேட கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
காரணம் நாம் கௌரவமாக மதிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பன குறைந்தளவில் கூட இல்லாத நாடு என்ற பெயரை பர்மா பெற்றுள்ளது.
மனித உரிமை தொடர்பான பிரச்சினையில் இலங்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை எழுதினால் எமது நாட்டை குறித்து எமக்கு பெரும் துயரம் ஏற்படக்கூடும். ஜனநாயகத்திற்கு விரோதமாக பல தசாப்பதங்களாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் உண்மையான தலைவியான ஹாங்சான் சுகி மற்றும் ஜனநாயகத்திற்காக போராட்டங்களை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகளுடனேயே உண்மையில் இலங்கை இருக்க வேண்டும் அன்றி பர்மிய அரசாங்கத்துடன் அல்ல.
எனினும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் ஜனநாயகத்திற்காக போராடும் பர்மிய நாட்டு மக்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு வாரத்தையில் கூட உதவி வழங்க தவறியுள்ளமையாகும்.
இலங்கை மீதுள்ள அன்பு காரணமாக மியன்மார் இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை. தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக சர்வதேச தளத்தில் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பர்மா இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
றொபேரட் முகாபேயின் சிம்பாப்வே முதல் காஸ்ரோவின் கியூபா வரையான சர்வாதிகார நாடுகள் தமது மக்கள் விரோத நிர்வாகத்திற்கு ஆதரவை பெறும் நோக்கிலேயே இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
இந்த நாடுகள் எதிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. ஊடகச் சுதந்திரம், நீதிமன்ற சுயாதீன தன்மை, அல்லது வேறு மனித உரிமைகளோ இந்த நாடுகளில் காணப்படவில்லை.
கடந்த வருடம் மியன்மாரில் பௌத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்ற ஜனநாயக எழுச்சி குறித்து நாம் அனைவரும் அறிந்துள்ளோம். இந்தப் போராட்டம் இரும்பிலும் தீயிலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எத்தனை பேர் எத்தனை வருடங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது. இவர்களில் சிலருக்கு 65 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் எங்கு நடைபெறுகின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயங்களை சரியான அறிந்தவர் எவருமில்லை.
இலங்கையிலும் முன்னர் இல்லாத வகையில் கருத்துகளை வெளியிடத் தடை காணப்படுகிறது இந்தத் தடையை உடைக்க கவிஞர்கள் சிலர் முன்னைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆரம்பத்தை பெரும் அலையாக உருவெடுக்க இடமளித்து, அவர்களை ஊக்கப்படுத்துவது தற்போது முக்கியமானது. ஜே.வீ.பீயும் அரசாங்கமும் போட்டி போட்டு கொலைகளில் ஈடுப்பட்ட 1988‐1990 ஆம் ஆண்டுகளில் இவ்வறான கவிஞர்கள் புறப்பட்டனர் எனவும் சுனந்த கூறியுள்ளார்.
பின் குறிப்பு:
போர் நிறுத்த காலத்தில் எழுத்தப்பட்ட இரண்டு கட்டுரைகள் தொடர்பில் ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டம் ஒன்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளை தம்வசம் வைத்திருந்ததற்காக மனித உரிமை சட்டத்தரணியான சாந்த பெர்ணாந்து கடந்த 27 ஆம் திகதி விமான நிலையத்தில் பொதிகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரு மாதம் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காவற்துறை நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான மனித உரிமை வழக்கில் ஆஜரான சட்டத்தரணி அமித ஆரியரத்னவின் அலுவலகம் எரியூட்டப்பட்டு, முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தனது கணவரான சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை தாம் அறிந்துள்ளதாகவும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வெளிப்படுத்த உள்ளதாக, அரசாங்க பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியை சோனாலி விக்ரமதுங்க விடுத்த கோரிக்கையை காவற்துறையினர் நிராகரித்துள்ளனர்.
மூன்று கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பிய ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் தற்காலிகமாக நாட்டில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்டு, காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கைளை எடுக்கும் முன்னர், நாட்டின் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளார், சுடரொளி பத்திரிகை ஆசிரியர் ஒரு பயங்கரவாதி என உலகத்திற்கு தெரிவித்துள்ளார். அவர் இரண்டு மாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் காங்காநாத் திசாநாயக்க கடத்திச் செல்லப்பட்டு, நாட்டில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம

தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம்தமிழனுக்கு வைத்தியம் பார்க்க முன்வருமா?




உலகின் முதலாவது செயற்கை அங்கமொன்று பொருத்தப்பட்ட தவளை என்ற பெருமையை தென் ஆபிரிக்கத் தவளையொன்று பெறுகின்றது.நாயொன்றால் கடிக்கப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இத் தவளைக்கு, தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க் நகரிலுள்ள மிருக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உலோகத்திலான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.மேற்படி சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வன வாழ்க்கை நிபுணர் ஆன் மியர்ன்ஸ் விபரிக்கையில், செயற்கைக்கால் பொருத்தப்படாவிட்டால் தவளை அசைய முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிக்குமா என்பது குறித்து முதலில் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் செயற்கைக் கால் தவளையின் இயல்பான அசைவுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தியுள்ளமை எக்ஸ்ரே படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஆறுதலாக உள்ளது என அவர் தெ?வித்தார்.மருத்துவமனை பராமரிப்பிலுள்ள தவளை தற்போது தேறி வருவதாக ஆன் மியர்ன்ஸ் கூறினார்.