யுனிசெஃப் அலுவலகம், பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் மீதும் வான்குண்டுத் தாக்குதல்


கிளிநொச்சி கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம் அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பனவும் சிறிலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதலில் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

அத்துடன் ஜெயந்தி நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் ஒப்ரெக் கல்வி நிறுவனம் மற்றும் வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிறுவனம் மீதும் சிறிலங்கா வான்படை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் அப்பணிமனையின் கட்டடங்கள் சேதமாகியுள்ளன.

தகுந்த காரணமின்றி கொழும்பு செல்லும் தமிழர்களை மதவாச்சியில் திருப்பி அனுப்பும் படையினர்


வடக்கிலிருந்து கொழும்புக்கும் தென்பகுதிக்கும் செல்வோரை மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்தில் வைத்துப் படையினர் காரணம் எதுவுமின்றி தமிழ் பயணிகள் கொழும்புக்குச் செல்ல முடியாதெனக் கூறி அவர்களைத் தடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

மதவாச்சி ரயில் நிலையத்திலுள்ள இராணுவ சோதனை நிலையத்திலிருக்கும் படையினரால் வடபகுதியிலிருந்து செல்லும் தமிழ் மக்கள் பல்வேறு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

இதன்போது கொழும்புக்கு அல்லது தென்பகுதிக்குச் செல்வதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. அதற்குரிய தகுந்த அத்தாட்சிகளைக் காண்பிக்காதவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் ஏமாற்றமடைந்து வவுனியாவுக்குத் திரும்பி வந்த பலர் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தலைநகர் கொழும்பிற்குப் பல தேவைகளுக்கும் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வழமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பயணிகளை அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்வது மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

மன்மோகன்சிங்கை கனிமொழி சந்தித்து இலங்கைப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்து.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமிழக முதல்வா கருணாநிதியின் மகள் கனிமொழி சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உப்புவெளியில் கிளைமோர்த்தாக்குதல்.

திருகோணமலை உப்புவெளி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற படையினர் மீதே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் ரோந்து சென்ற இரு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த மேலதிக படையினர் அங்கு தேடுதல்களையும் நடத்தினர்.

அண்மைக் காலமாக திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதும் தெரிந்ததே.

தமிழீழ காவற்துறை நடுவப் பணியகத்தின் மீது இலங்கை வான்படை தாக்குதல்


சிறீலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் தமிழீழக் காவல்துறையின் நடுவப் பணியகத்தின் கட்டிடத் தொகுதிகளை இலக்கு வைத்து அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது காவல்துறையினரின் கேட்போர்கூடத்தின் பின்பகுதி மண்டபம் முற்றாக அழிவடைந்துள்ளது.

சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா வான்காப்பு படையினரின் வானூர்தி எதிர்ப்புத் தாக்குதலையடுத்துக் காவல்துறை நடுவப் பணியகத்தின் பிரதான கட்டிடத் தொகுதி தாக்குதலுக்கு உள்ளாகாது தப்பியுள்ளளது.

இதேநேரம் அருகில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் களஞ்சியசாலை மீதும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது களஞ்சியப் பகுதியில் கடும் சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன நாசமடைந்தன

நேற்று அரசியல்த்துறை,சமாதானச்செயலகம் மீதும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் உக்கிரமுறும் வான் தாக்குதல்கள் - உதயன் ஆசிரியர் தலையங்கம்.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவர்களை ஒழித்துக்கட்டும் போர் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அரச தரப்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாள்களாக ஆரூடம் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கேந்திர மையமான அவர்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர் மீது, படைநகர்வு பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளதாக அவர்கள் அடிக்கடி அறிவித்து வந்தார்கள்.
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் சிறிது தூரமே உள்ளது. எமது படையினர் கிளிநொச்சியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேளையிலும் படையினர் உள்ளே செல்லலாம். அடுத்த வாரத்தில் கிளிநொச்சியில் கடும் சண்டை மூளும். இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான போர்ப் பேரிகைகளை முழங்கிக் கொண்டிருந்தனர்.
இவற்றுக்கிடையில் இந்த வாரத்தில் கடுமையான தாக்குதல்கள் கிளிநொச்சியை அண்டி நடைபெறப்போவதாக பாதுகாப்பு விமர்சகர்களும் ஆரூடம் கூறியிருந்தனர்.
அந்தவாறே கிளிநொச்சியில் அரசு பெரும் தாக்குதலைத் தொடங்கி விட்டதாகக் கருதலாம். விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முக்கிய தளங்களையும் விமானக் குண்டுவீச்சு மூலம் அழித்து வருவதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கடந்த சில நாள்களாக கிளிநொச்சியில் விமானத் தாக்குதல்களால் மரணமுறுவோரும் காயப்படுவோரும் பொதுமக்களாகவே இருக்கின்றனர்.
விமானக் குண்டு வீச்சுகளில் பொதுமக்களின் வீடுகளும், ஆலயங்களுமே அழிவதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை மட்டுமன்றி சர்வதேசத் தொண்டர் அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சிறிது தொலைவிலும் வைத்தியசாலை போன்ற மனிதாபிமான, மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்குச் சற்றுத் தொலைவிலும் குண்டுகளும், குண்டுச் சிதறல்களும் விழுகின்றன.
கிளிநொச்சியில் ஏ9 வீதியில், 55ஆம் கட்டையில் உள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் குண்டு விழுந்திருக்கின்றது. கிளிநொச்சி அரசினர் ஆஸ்பத்திரிக்கு சற்றுத் தொலைவில் போடப்பட்ட குண்டுக ளின் சிதறல்கள் ஆஸ்பத்திரியின் யன்னல் கண்ணாடிகளை நொறுக்கியுள்ளன.
இத்தனைக்கும் மேற்படி இரண்டு நிறுவனங்களும் தாம் மனிதநேயப் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் என்பதனைத் துலாம்பரமாக தெளிவாக தெரியக்கூடியதாக கட்டடக் கூரைகளில் தமது குறிகளை இட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போர் வேளைகளில் மேற்படி நிறுவனங்கள் தாக்கப்படக் கூடாது, விமானத் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதற்கான குறியீடுகளே அவை. இது சர்வதேச விதிமுறையுமாகும்.
இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது எமது நோக்கமல்ல; வேறு இடத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதும் எந்த வகையிலும் பொருந்தாது.
போரால் மக்களோ, மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதில் ஈடுபடும் இரண்டு தரப்புகளும் கவனத்தில் எடுத்து நிதானமாகச் செயற்படுவது அவசியம்; உறுதிப்படுத்துவது பிரதான தேவையாகும்.
அதுவும், விமானத் தாக்குதல் நடத்த உத்தேசித்துள்ள அமைவிடங்கள் வரைபடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டே அவை நடத்தப்படுவதாக அரசு கூறுவது வழமையான வாய்ப்பாடு. அவ்வாறிருக்க தாம் இலக்கு வைத்து குறிபார்த்து தாக்குதல் நடத்தும் இடங்களை நுட்பமாக இனங்கண்டு தாக்கும் நவீன வசதிகள் இலங்கை விமானப் படையிடம் இல்லாதிருக்க முடியாது.
ஆகையால், விமானப்படையின் தாக்குதல்களால் பொதுமக்களின் வாழ்விடங்களும், பொது இடங்களும் வைத்தியசேவை போன்ற அத்தியாவசிய மற்றும் மனிதாபிமான சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களும் சேவைகளும் பாதிப்புறுவதை அல்லது தடைப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
செஞ்சிலுவை, உலக உணவு நிறுவனம், வைத்தியசாலை போன்ற இடங்கள் விமானக் குண்டு வீச்சால் பாதிப்படைவது, அவற்றின் சேவைகளை தடைபண்ணும் நோக்குடன் விடுக்கப்படும் எச்சரிக்கையா? இத்தகைய சந்தேகம் எழுவதை அரசு தடுக்க இயலாது; மழுப்பவும் முடியாது.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினர் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு தொழிலில் ஈடுபட்டிருந்த வத்திராயனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பாசம், வத்திராயனைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சயந்தன் (வயது 25) ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்களே காணாமல் போனவர்கள் ஆவர்.

இது தொடர்பில் ஏனைய கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்;

தாம் தொழிலில் ஈடுபட்ட வேளை திடீரென வந்த டோறா பீரங்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் தாங்கள் வலைகளை வெட்டிவிட்டு கரை திரும்பியதாகவும் தெரிவித்தனர்.

காணாமல் போன கடற்றொழிலாளர்களின் படகும் தமக்கு அருகிலேயே தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் காணாமல் போன இருவர் தொடர்பில் தமக்கு ஏதும் தெரியவில்லை எனவும் ஏனைய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசம் அறிக்கை:

தமிழீழக் கடற்பரப்பில் தமது அன்றாட வாழ்வுக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற அப்பாவிக் கடற்றொழிலாளர்களின் உயிர்களையும் கடற்றொழில் உபகரணங்களையும், பாதுகாக்க உலகம் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்தி வருகின்ற தாக்குதலினால் தொடர்ச்சியாக கடற்றொழிலாளர்கள் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதனால் தொடர்ச்சியாக கடற்படையினர் நடத்தும் தாக்குதலால் எமது கடற்றொழிலாளிகள் முற்றாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வருவாயினை எட்ட முடியாமல் செல்லும் அபாயத்தினை எதிர்கொள்வதை நாங்கள் வன்மையான கண்டிக்கின்றோம்.

கடற்றொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமின்றி அனைவரும் குரல் கொடுத்து சிறிலங்கா கடற்படையினரைக் கண்டித்து எமது கடற்றொழிலாளர் சமூகத்தினை அழிவில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செயற்படவில்லையாம் – காங்கிரசுக்காகவும் பதவிக்காகவும் வக்காலத்து வாங்கும் வீ. தங்கபால


இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழக காங்கிரஸ் தலைவர் வீ தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இலஙகைத் தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பத்கு முன்னாள் பிரதமர் நேரு முதல் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பல்வேறு வகையில் முனைப்புக் காட்டி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சகல தமிழகக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென தமிழக காங்கிரஸின தலைவர் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி தொடர்பில் தவறான எண்ணக்கருவை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விதைக்க முற்படக் கூடாதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிளிநொச்சி நகரை நோக்கி சிறிலங்கா படையினர் அகோர எறிகணை வீச்சு - பெரும் தாக்குதலுக்கான முன்னோட்டம்


கிளிநொச்சி நகரத்தின் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி நகரின் மத்திய பகுதி வரையான பகுதிகளில் செறிவாக நூற்றுக்கணக்கில் சிறிலங்கா இன்று வியாழக்கிழமை இரவு எறிகணைத்தாக்குதல் நடத்தினர்.

நூற்றுக்கணக்கில் ஆட்டிலெறி எறிகணைகளும் பல்குழல் வெடிகணைகளும் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதனால் பெருமளவில் மக்களின் வாழ்விடங்கள், வணிக நிலையங்கள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்த எறிகணை தாக்குதலினால் கிளிநொச்சி நகரம் மூன்று மணிநேரம் அதிர்ந்தது.

இத்தாக்குதல்களில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசிங்கம்- பவுணன் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினர் நாளை பெரும் தாக்குதலினை தொடுக்கும் வகையில் முன்னோட்டமாக இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் நிலைப்பாடு குறித்த ஜெயலலிதாவின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதோடு தான் இன்னும் நடிகை தான் என்பதை நிரூபித்துள்ளார்.


இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அ.இ.தி.மு.க தலைவியும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதாவின் இரட்டை வேடம் மீண்டுமொருமுறை அம்பலமாகியுள்ளது.
இலங்கைக்கு இந்திய மத்திய அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை எட்ட இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியும் இன்றைய தினம் தமிழகத்தில் நடத்தப்பட்ட பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

குறிப்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய மார்கிஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டமையினால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போராட்டத்தை புறக்கணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதிலிருந்து விஜயகாந்தின் கட்சியைக் கண்டு
ஜெயலலிதா பயத்தில் ஒதுங்கியிருக்கின்றார் என்பது தெளிவாக புலப்படுகின்றது.

வன்னிக்களமுனையில் ஈரான் கொடுத்த இரசாயண போராயுதமான மஸ்ரட் வாயு பயன்பாட்டுத் தவறினால் 47 இராணுவத்தினர் பலி நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

கடந்த மூன்று தினங்களின் முன்னர் வன்னிக்களமுனையில் ஈரான்
அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இரசாயண ஆயுதங்களை கையாண்டதில்
ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது 47 இராணுவத்தினர்
கொல்லப்பட்டு தென்னிலங்கைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் அனேகமானோர் எரிகாயங்களுடனும் கண்கள் கருகிய
நிலையிலும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களது உடலங்களை
பார்ப்பதற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென்னிலங்கையிலுள்ள இராணுவ செய்தித்தடை காரணமாக
இச்செய்தியை வெளியிடுவதில் சிங்கள பத்திரிகையாளர்கள் பின்
நிற்பதாக தெரியவந்துள்ளது. இதே வேளை இந் நாசகார ஆயுதமான
மஸ்ரட் காஸ் ஈரான் அரசினால் சிறிலங்கா அரசிற்கு கொடுக்கப்பட்டு
இருப்பதையும் தென்னிலங்கை பத்திரிகையாளர் உறுதிப்படுத்துகின்றார்.
இவ் இரசாயண ஆயுதபாவனை தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை
பிரதான எதிர்க்கட்சிக்கு கொடுக்கப்பட்டிருப்பதோடு போப்பாண்டவருக்கும்
அறிவித்திருப்பதாக தெரிய வருகின்றது. இத்தவறினார் 500 க்கும் மேற்பட்ட
சிறிலங்கா இராணுவத்தைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் வந்துள்ளன.

இதன் மூலம் சிறிலங்கா அரசு வன்னிக்களமுனையில் இரசாயண
ஆயுதம் பாவிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் இரசாயண
ஆயுதங்களுடன் சிக்குன்குனியா நொயை பரப்பக்கூடிய உயிரியல்
இரசாயண ஆயுதங்களும் ஈரானால் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இச்செய்தி தொடர்பில் உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு
உலகத்தமிழர்கள் இதற்கு எதிரான வெளிப்பாடுகளை உலகெங்கும்
செய்யும்படி நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி - நிதர்சனம்