இலங்கைத் தமிழர் நிலைப்பாடு குறித்த ஜெயலலிதாவின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதோடு தான் இன்னும் நடிகை தான் என்பதை நிரூபித்துள்ளார்.


இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அ.இ.தி.மு.க தலைவியும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதாவின் இரட்டை வேடம் மீண்டுமொருமுறை அம்பலமாகியுள்ளது.
இலங்கைக்கு இந்திய மத்திய அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை எட்ட இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியும் இன்றைய தினம் தமிழகத்தில் நடத்தப்பட்ட பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

குறிப்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய மார்கிஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டமையினால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போராட்டத்தை புறக்கணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதிலிருந்து விஜயகாந்தின் கட்சியைக் கண்டு
ஜெயலலிதா பயத்தில் ஒதுங்கியிருக்கின்றார் என்பது தெளிவாக புலப்படுகின்றது.

No comments: