தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம

தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம்தமிழனுக்கு வைத்தியம் பார்க்க முன்வருமா?




உலகின் முதலாவது செயற்கை அங்கமொன்று பொருத்தப்பட்ட தவளை என்ற பெருமையை தென் ஆபிரிக்கத் தவளையொன்று பெறுகின்றது.நாயொன்றால் கடிக்கப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இத் தவளைக்கு, தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க் நகரிலுள்ள மிருக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உலோகத்திலான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.மேற்படி சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வன வாழ்க்கை நிபுணர் ஆன் மியர்ன்ஸ் விபரிக்கையில், செயற்கைக்கால் பொருத்தப்படாவிட்டால் தவளை அசைய முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிக்குமா என்பது குறித்து முதலில் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் செயற்கைக் கால் தவளையின் இயல்பான அசைவுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தியுள்ளமை எக்ஸ்ரே படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஆறுதலாக உள்ளது என அவர் தெ?வித்தார்.மருத்துவமனை பராமரிப்பிலுள்ள தவளை தற்போது தேறி வருவதாக ஆன் மியர்ன்ஸ் கூறினார்.

No comments: