தமிழக மீனவரை சுட்டது கடற்படை இல்லையாம், மூன்றாம் தரப்பாம்.. இலங்கை தூதரகம்


தமிழக மீனவர் ஒருவர் நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை இலங்கை மறுத்துள்ளது.

கச்சத்தீவுப் பகுதியில் இவ்வாறான சம்பவம் ஒன்றில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடவில்லை என சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை உடனடியாக இலங்கையின் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது இலங்கைக் கடற்படையினர் குறித்த சம்பவம் தம்மால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சென்னையின் இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கு மூன்றாம் தரப்பு ஒன்று காரணமாக இருக்கலாம் என இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது

2 comments:

தேவன் said...

இந்த கும்சாவை துவைத்து காயப் போடாமல் விட்டிருக்கின்றார்களே தமிழ்நாட்டுக்க்காறர்.

Unknown said...

உண்மை தான் திரு.தேவன்.
நல்லா காக்கா பிடிக்கிறார் அம்சா.
முதல் எண்டா விடுதலைப்புலிகள் மீது
பழி போடலாம். ஆனால் இப்ப நாச்சிக்குடாவையும் பிடிச்சிட்டம் என்று
மார்தட்டினதால அந்த வழியும் தவறி விட்டது. அது தான் 3ம் தரப்பாம்..
இன்னும் எத்தின தரப்பு வரப்போகுதோ தெரியல.