தமிழகத் தலைவர்கள் நாக்கை பிடுங்கி விட்டு சாகலாம் - இந்திய மத்திய அரசின் ஆதரவு இருக்கும்வரை தமிழகத்தின் சலசலப்புக்கு அஞ்சோம்: இலங்கை ஊடக அமைச்சர்


இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவு நன்றாகவே உள்ளது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும்வரை எதற்கும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.தமிழ் நாட்டின் சலசலப்புக்கு இலங்கை அரசு ஒருபோதும் அஞ்சாது.இவ்வாறு இலங்கை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிராகவும், அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் அரசியல்கட்சிகளால் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி இலங்கைக்குக் கவலையில்லை. என்றும் அவர் கூறினார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசுமீது பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தமிழ் நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.இந்தப் போராட்டங்கள் பற்றி இந்திய அரசு எமக்கு அறிவிக்கவில்லை. இவை இலங்கை இந்திய உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு ஒருபோதும் புலிகளுக்கு ஆதரவு வழங்கமாட்டாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு குறியாயிருக்கின்றது.
எமக்கும் இந்திய அரசுக்குமிடையில் நல்லதோர் உறவு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்குப் பல உதவிகளைச் செய்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் நாம் யுத்தம் செய்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. ஆனால், நாம் தமிழ் மக்களை அழிக்கின்றோம் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை.
எனவே, தமிழ் நாட்டில் ஏற்படும் இவ்வாறான சிறுசிறு சலசலப்புகள் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்படமாட்டோம்.

2 comments:

Unknown said...

மத்திய அரசில் அமைச்சர்களாக உள்ளவர்கள் இதனை பார்த்து என்ன முடிவெடுக்கப்போகின்றார்கள்?
இனியும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு இருக்கப்போகிறார்களா?
ரோசம் கெட்டவர்கள். அது தான் ஜெயலலிதா நல்லா கிளிச்சிருக்கிறா..

Thamizhan said...

நண்பர்கள் அடக்கி வாசிக்கவும்.
சிங்கள நரித்தனத்தில் விழுந்து தமிழகத்திற்கும்,புது டில்லிக்கும் பிளவு ஏற்படுத்தும் முயற்சி வலையில் சிக்க வேண்டாம்.
தமிழகத்தையும்,டில்லியையும் சிங்களத்திற்கு எதிராக இருக்கவே வேண்டி பொறுமை காக்க வேண்டுகிறேன்.
சோனியா அம்மையாருக்கு நேரே எழுதும் முயற்சி பயனளிக்கும்.