கொழும்பில் மூவர் கடத்தப்பட்டனர்

whait_van.jpgதிருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை,மலையகத்தை சேர்ந்த மூவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை லிங்க நகரை சேர்ந்த தியாகராஜா ஜெகன்(29வயது) என்பவர் கடந்தவாரம் கொழும்பு செட்டியா தெருவில் காணாமல்போயுள்ளார்.

ஜெகன் திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் கொழும்பில் இருந்து சென்ற விசேட படை பிரிவால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு வந்து, கடந்த இருவருடங்களாக கொழும்பு செட்டியா தெரு 83ஆம் இலக்க நகைகடையில் தனது உறவினருடன் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த இருவருடங்களில் மூன்று தடவைகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ் காரை நகரை சேர்ந்த சுப்ரமணியன் சிறிதரன்(39வயது)என்பவர் கடந்த 19ஆம் திகதி வெள்ளைவான் ஆயுததாரிகளினால் தெஹிவளையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

பிரபல ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிவரும் இவர் ஆறு பேர் கொண்ட பொலிஸ் மற்றும் சிவிலுடையில் வந்த வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்டவரின் மனைவி,பிள்ளைகள் கனடாவில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நுவரேலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்தின் மீக்கா தோட்டத்தை சேர்ந்த,கொழும்பு கிராண்பாஸில் வசித்துவந்த சின்னத்தம்பி திருச்செல்வம்(38வயது)என்பவர் கடந்த 21ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும், கிராண்பாஸ் ,நவகம்புர பகுதியில் நீண்டகாமாக வசித்துவரும் இவர் கடந்த 21ஆம் திகதி கிராண்பாஸ் மெஸன்சர் வீதியில் உள்ள காடவெயார் ஒன்றில் தொழில்புரிந்துவந்துள்ளார்.

கடந்த 21ம் திகதி வேலை முடிந்து 4.00மணியளவில் வீதி திரும்பியவர் இதுவரை வீடு திரும்பவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸ் நிலையம் மற்றும் மக்கள் கண்காணிப்பு குழு என்பனவற்றில் முறையிடப்பட்டுள்ளது.

No comments: