கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு வெள்ளி பி.ப 4 மணிக்கு ஆரம்பம்


கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (வெள்ளி) மாலை 4மணி 01 நிமிடமளவில் கனடா றிச்மன்ட்ஹில் ஆலய கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்த வண்ணமுள்ளது.


தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துன்பங்கள் வெளித் தெரியும் வண்ணம் அமைதிவழிப் போராட்டத்திற்கே மகுடம் சேர்த்த இன்றைய பொழுதிலே கனேடித் தமிழ் இளையோர் சமூகம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில்

35 இற்கு மேற்பட்ட இளையோர்களின் முழுமையான 30 மணித்தியால உண்ணா நிலை நிகழ்வுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

கவனயீர்ப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விலே சேகரிக்கப்படும் நிதியானது தாயகப்பகுதியிலே தற்போதைய இடப்பெயர்வால் அல்லலுறும் மக்களிற்கு, அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவர்களிற்கு வழங்கப்படுகின்றது.


நிகழ்வினை மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் துணைவியார் ஈகைச்சுடரேற்றி உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உண்ணா நோன்பில் கலந்து கொண்ட இளையவர்களால் அவர்கள் ஏன் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற தம் விளக்கத்தை தெரியப்படுத்தினர்.

அத்துடன் இளையோரின் இச் செயற்பாட்டிற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்துப் பல மக்கள் வருகை தந்து ஊக்கமளித்துக்கொண்டுள்ளார்கள். இன்று ஆரம்பமாகியுள்ள இவ்வுண்ணா நோன்பு நிகழ்வு நாளை சனி இரவு 10 மணிக்கு நிறைவடையும் என்பதனை கனேடியத் தமிழ் இளையோர் தெரியப்படுத்துகின்றனர். அவர்களை

647 834 1075 என்னும் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொள்ளமுடியும்.

No comments: